ETV Bharat / state

கபசுர நீர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

author img

By

Published : Mar 31, 2020, 5:37 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள சித்த மருந்துக் கடையில் கபசுர நீர் வாங்குவதற்காக இரண்டு கி.மீ. தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்தனர்.

people show interest to buy kabasura water in nagercoil

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் கேரளாவில் 200க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா வைரஸ் குறித்த அச்சம் கன்னியாகுமரி மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர நீர் அருந்தலாம் என தகவல் வெளியானது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் தகவல் வெளியானது. இதன் பிறகு கன்னியாகுமரி மக்களிடையே கபசுர நீர் வாங்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள மிகப் பிரபலமான கோபாலன் ஆசான் சித்த மருந்துக் கடையில் கபசுர நீர் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், சமூக இடைவெளி தேவை என்பதாலும் ஒரு நபருக்கு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் வரிசையாக நின்று இந்த கபசுர நீரை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க... கபசுர குடிநீர் பொடி வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.