ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்.. ஏ1 அக்யூஸ்ட்டாக ரவுடி நாகேந்திரன்.. முதல் மூன்று இடத்தில் யார்? - Armstrong case charge sheet

முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 12:32 PM IST

சென்னை: பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், இதுவரை சுமார் 28 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளும், பிரபல ரவுடிகளும், வழக்கறிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபர்களை தனித்தனியாக காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு தகவல்கள் வெளியாகியது.

அதில், ஆம்ஸ்ட்ராங் தங்களது தொழில்களுக்கு இடையூறாக இருந்ததால் ரவுடிகள், வழக்கறிஞர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரயிலில் அடிபட்டு 317 பேர் உயிரிழப்பு.. சேலத்தில் 9 மாதங்களில் நடந்த துயரம்.. காரணம் என்ன?

இந்த நிலையில், முதல் கட்டமாக விசாரணை முடிந்த நிலையில், செம்பியம் போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்து வரும் பிரபல ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் என இருவரையும் சேர்த்து 30 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கொலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை குற்றப்பத்திரிகையில் போலீசார் இணைத்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை எப்படி நிகழ்த்தினார்கள் என தனித்தனியாக காவலில் எடுத்து விசாரித்த போது, அவர்கள் அளித்த வாக்குமூலங்களும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

மேலும், குற்ற பத்திரிகையில் ஏ1 எதிரியாக பிரபல ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏ2 எதிரியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலும், ஏ3 எதிரியாக ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனை இணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதிகள் ஆய்வு செய்து வாதங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்டோரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கம் செய்ய வேண்டும் என நடைமுறை இருந்து வரும் நிலையில், மூன்று மாதத்திற்கு முன்னதாகவே செம்பியம் போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.