கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஏசுதாசன், வர்க்கீஸ், மிக்கேல் பிள்ளை, கிளாரன்ஸ், வின்சென்ட் ஆகியோர் தேங்காய்ப்பட்டணம் துறைமுகப் பகுதியிலிருந்து IND-15-MO-2656 என்ற எண் கொண்ட வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது துறைமுக முகத்துவாரத்தில் வைத்து வள்ளம் திடீரென கவிழ்ந்தது. இதில் மீனவர் ஏசுதாசன் கடலில் மூழ்கி மாயமானார். பின்னர் சக மீனவர்கள் உதவியுடன் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே மாயமான மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர், மீன்வளத் துறை அமைச்சர், மீன்வளத் துறை அலுவலர்களுக்கு அப்பகுதி மீனவர்கள் வேண்டுகோள்வைத்துள்ளனர்.