கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் விசித்திரா. இவர் தக்கலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளை சரியாக செய்வதில்லை என்றும், ஊராட்சி மன்ற தலைவர்களையும் அவர்களது கருத்துக்களையும் மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 பஞ்சாயத்துகளிலும் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஊராட்சி ஒன்றிய தலைவர்களை தக்கலை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: