கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட மகாராஜபுரம் கிராம பஞ்சாயத்தில் 1996-97ஆம் ஆண்டு ஜவஹர்லால் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மகாராஜபுரம், பெரியவிளை, அரிதாசபுரம், சுந்தரபுரம், பெரியவிளை, நரிகுளம் ஆகிய எட்டு இடங்களில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதியில் டிவி அறை கட்டப்பட்டது.
இதில் மகாராஜபுரம் லைப்ரரி அருகில் கட்டப்பட்ட டிவி கட்டடத்தை காணவில்லை என்றும் எனவே காணாமல்போன அந்த கட்டடத்தை கண்டுபிடித்து தருமாறு மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட ஆட்சியர், அகஸ்தீஸ்வரம் பிடிஒ-க்கு புகார் மனு அளித்துள்ளார்.
கிணற்றை காணவில்லை என வரும் வடிவேலு பட காமெடியைப் போல் டிவி அறையை கண்டுபிடித்து தர ஊராட்சி தலைவர் புகார் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...கோயபல்ஸ் போல பரப்புரை செய்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்