தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பனைமரம் தற்போது வேகமாக அழிந்துவருகிறது. இந்த மரத்தை பாதுகாக்கும் விதமாக பல்வேறு அமைப்புகள் பனைமர விதைகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன.
அந்தவகையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயம் காப்போம், சேவாபாரதி அமைப்புகள் சார்பில் மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் நாராயணநேரி குளக்கரையில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தா கல்லூரி, நூருல் இஸ்லாம் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு சுமார் நான்காயிரம் பனைமர விதைகளைக் குளத்தின் கரையில் நடவு செய்தனர்.
இதையும் படிங்க : மகனின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்ட காவலர்.!!