ETV Bharat / state

பகவதி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா!

கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

pakavathiamman-temble
author img

By

Published : May 12, 2019, 11:08 AM IST

தமிழ்நாட்டில் பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்நிலையில், இந்தாண்டு பகவதி அம்மன் கோயில் திருவிழா மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் தினந்தோறும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, அன்னவாகனத்தில் தேவி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பகவதி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா

இதையடுத்து சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து பவனி வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் முருக பக்தர்கள் நடத்தும் பஜனையும், பிரம்ம குமாரிகள் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Intro:தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. மூன்றாவது திருவிழாவான இன்று மாணவ மாணவிகளின் கண்கவர் மாறுவேட நிகழ்ச்சிகளும் பகவதி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Body:தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. மூன்றாவது திருவிழாவான இன்று மாணவ மாணவிகளின் கண்கவர் மாறுவேட நிகழ்ச்சிகளும் பகவதி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினம் தோறும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் திருவிழாவான இன்று காலையில் அபிஷேகமும் தொடர்ந்து ஏழு மணிக்கு அன்ன வாகனத்தில் தேவி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது .மாலையில் முருக பக்தர்கள் நடத்தும் பஜனையும் பிரம்ம குமாரிகள் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் மற்றும் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் மாணவ-மாணவிகள் விநாயகர், முருகர், கிருஷ்ணர் ,கன்னியாகுமரி பகவதி அம்மன் போன்ற பல்வேறு வேடங்களில் மாறுவேடங்கள் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பகவதி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி கன்னியாகுமரி திருவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் பெருமளவில் அம்மனை தரிசனம் செய்தனர் தற்போது கோடை விடுமுறை நாள் கன்னியாகுமரியில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை சுற்றுலாவோடு இணைந்து அம்மனையும் தரிசனம் செய்து சுற்றுலாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.