ETV Bharat / state

பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 850 கன அடி நீர் திறப்பு! - water for irrigation

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் திறந்து வைத்தார். மாவட்டம் முழுவதும் சுமார் 99ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்காக விநாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

author img

By

Published : Jun 1, 2022, 4:20 PM IST

கன்னியாகுமரி: விவசாயத்தின் நீர் ஆதாரமாகவும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருவது, பேச்சிப்பாறை அணை. இந்த அணையில் உள்ள தண்ணீர் மூலம் குமரி முதல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலூகா வரை சுமார் 99 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யபட்டு வருகிறது.

குறிப்பாக கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக நெல்சாகுபடியும், வாழை, தென்னை, மரச்சீனி, ரப்பர் உள்ளிட்டப் பல்வேறு பயிர்களின் சாகுபடியும் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் அணைகள் மூடப்பட்டு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாயத்திற்காக திறக்கப்படுவது வழக்கம்.

இதையடுத்து இந்த ஆண்டிற்கான முதல் பருவ கன்னிப்பூ நெல்சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்துகொண்டு அணையிலிருந்து மதகு வழியாக 850 கன அடி தண்ணீரை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறக்கபட்டன. முதற்கட்டமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 850 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விவசாயத்திற்காக நீர் கால்வாய் வழியாக விடப்படும். மேலும் 75 விழுக்காடு கால்வாயும் தூர்வாரப்பட்டது.

குமரி மாவட்ட விவசாயத் தேவைக்கும் அதிகமாக அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த கனமழைக் காலத்தில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பரக்காணி தடுப்பணை பணிகள் முடிவடைந்துள்ளன’ எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் திறந்து வைத்தார்

இதையும் படிங்க: கடைமடைப் பகுதியான திருவாலங்காடு வந்தடைந்த காவிரி நீர்; விவசாயிகள் மகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.