கன்னியாகுமரி: கேரள மக்களின் வசந்த விழாவான இந்த திருவோண பண்டிகை பத்து நாள்கள் கொண்டாடப்படும். கடந்த மாதம் 30ஆம் தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது. பண்டிகை தொடங்கிய நாள் முதல் கேரள மக்கள் தினம் தினம் விதவிதமான அத்தப்ப கோலங்கள் போடுவதற்காக தோவாளை பூச்சந்தையில் பூக்களை வாங்கிச் சென்றனர்.
பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை மட்டுமன்றி பூக்களின் விலையும் அதிகரித்தது. மல்லிகை பூ கிலோ 3ஆயிரத்து500 முதல் 4ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சி பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளது.
இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வழக்கப்படி ஓணம் கொண்டாடப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். தோவாளை பூ சந்தையில் இதுவரை 600 டன்களுக்கு மேல் பூக்கள் விற்பனையாகி உள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை - அத்தப்பூ கோலமிட்டு அசத்தல்!