ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது!

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே பலசரக்கு கடைக்கு பொருள்கள் வாங்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

author img

By

Published : Oct 9, 2020, 4:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேவுள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி (65). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.

தற்போது அவர் அதே பகுதியில் ஸ்ரீ சிவசக்தி என்ற பெயரில் பலசரக்கு கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி பொருள்கள் வாங்க வந்தபோது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை, சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதியவரின் பலசரக்கு கடையை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, நேசமணியை குழித்துறை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு கடையடைப்புப் போராட்டம் நடத்திய முடித்திருத்துவோர் சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.