ETV Bharat / state

கிரிக்கெட் மட்டையால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன் கைது! - old lady killed by her grandson

கன்னியாகுமரி: கிரிக்கெட் மட்டையால் பாட்டியை சொந்த பேரனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் மட்டையால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன் கைது!

author img

By

Published : Aug 19, 2020, 8:01 PM IST

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள சரல் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செல்லம் (85). இவர் தனது வீட்டு முன்புள்ள பாதையில் இன்று (ஆக19) இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

இதைக் கண்ட அண்டை வீட்டார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை செல்லத்தின் உடலை மீட்டு உடற்கூறாவுக்காக ஆசாரிப்பளள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் காவல் துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது மூதாட்டியின் பேரன் ரதீஷ் (27) என்பவர் சந்தேகத்திற்கு இடமாக உடம்பில் ரத்த கறையோடு சுற்றித் திரிந்தார். இதையடுத்து ரதீஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில், தனது மகன் வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை நேற்று மாலை (ஆக18) அவரது பேரனே கொன்றது தெரிய வந்தது.

தற்போது, ரதீஷை காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில், ரதீஷ் திருமணம் ஆகாதவர் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:ஊத்தாப்பம் கேட்டு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.