ETV Bharat / state

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பழைய பேட்டரிகள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து
தீ விபத்து
author img

By

Published : Jun 23, 2022, 7:35 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி கட்டுபாட்டில் நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் மலைபோல் குப்பைகள் குவிந்து காட்சி அளிக்கின்றது. இதில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே தற்போது நாகர்கோவில் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வலம்புரி விளை குப்பை கிடங்கில் ஏற்கனவே உள்ள குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் இன்று குப்பை கிடங்கில் கொட்டப்படிருந்த பழைய பேட்டரிகள் திடீரென வெடித்து தீப்பிடித்து பற்றி எரிந்தது.

தீ விபத்து

இதை கண்ட பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பை கிடங்கில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவியது. இதையடுத்து சம்பவ இடம் வந்த 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

புகை மூட்டம் தீயினால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு புகை மூட்டமாக இருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். புகை மூட்டதால் அக்கம் பக்கம் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் அவதியடைந்தனர். முதியவர்கள் மூச்சி முட்டுவதால் ஊரை விட்டு வெளியேறினர். நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனக்குறைவால் அடிக்கடி இந்த தீ விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - உரிமையாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.