கன்னியாகுமரி மயிலகோடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபின்ராஜ். இவர் நான்கு வழிச்சாலை பணிக்காக தனது நிலத்தை அரசிடம் ஒப்படைத்தார். அதற்கான பணத்தை அலுவலர்கள் தராமல் மிரட்டுவதாக இன்று (டிச.7) அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ரூபின்ராஜ் கூறுகையில், "மயிலகோடு பகுதியில் வசித்து வருகிறேன். இப்பகுதியில் நான்கு வழிச்சாலை பணி நடைபெறுகிறது. இதற்காக எனது நிலத்தை அரசிடம் ஒப்படைத்தேன்.
சுமார் 12 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கு வெறும் 4 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. மீதி பணத்தை கேட்டால் அலுவலர்கள் மிரட்டுகின்றனர்.
தற்போது வீட்டை இடிக்கப்போவதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து அதிமுக போராட்டம்!