கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கத்தினர் நேற்று (பிப்.23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, "அதிக பணிச்சுமை கொடுக்கின்றனர். ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக பாலியல் தொந்தரவு காரணமாக செவிலியர் தற்கொலை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல்லில் இந்த பிரச்னை காரணமாக செவிலியர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான விசாரணையை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்" என்றனர்.
இதில் 200க்கும் மேற்பட்ட செவிலியர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வீட்டிலேயே அக்குபஞ்சர் முறையில் பிரசவம்: தாய்-சேய் உயிரிழப்பு