குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கடற்கரை சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கண்ணாடி குடோன் செயல்பட்டு வருகிறது. இந்தக் குடோனில் சுமார் 10 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 5 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் குடோனில் இன்று (அக்.20) கண்ணாடிகளை எடுத்து அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜெய்தீப் என்பவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணாடி அவர் மீது சரிந்து விழுந்தது.
இதில் அவரது கழுத்து அறுபட்டு, ஜெய்தீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சமபவ இடத்திற்கு வந்த கோட்டார் காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜெய்தீப் மீது கண்ணாடி எவ்வாறு விழுந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை