கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே துறையில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 8 மாதங்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது கரோனா தடுப்பு ஊரடங்கால் கடந்த 40 நாள்களுக்கு மேலாக இவர்களுக்கு ஊதியம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இதனிடையே, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்கு இடமின்றியும், உணவு இல்லாமலும் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் வந்து தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தபோது அலுவலர்கள் கண்டுகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சொந்த ஊருக்கு செல்ல ரயில் விடக்கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்