கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் பள்ளி அருகே தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் அசாம், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேரந்த பலர் பணிபுரிந்துவருகின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நாங்கள் பணிபுரிகிறோம். ஆனால் தங்களுக்கு டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஊதியங்கள் அளிக்கப்படவில்லை. அதனை உடனடியாக அளிக்கவேண்டும் என வலியுறுத்தி ஹோட்டல் உரிமையாளரின் காரின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர், காவல் துறையினர் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஊதியம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலியால் தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு