ETV Bharat / state

ராட்சத ராட்டினம் அகற்றும் பணி: வடமாநில வாலிபர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 22, 2019, 7:18 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு போடப்பட்ட பொருட்காட்சி நிறைவு பெற்றதையடுத்து, ராட்சத கேளிக்கை ராட்டினங்கள் அகற்றுகையில் வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமாநில வாலிபர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி சார்பாக மகாராஜா அவிட்டம் திருநாள் நினைவு காப்பக மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையையொட்டி பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொருட்காட்சியை திட்டுவிளை பகுதியை சேர்ந்த ஃபாரூக் நடத்தி வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த பொருட்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து பொருட்காட்சியில் அமைக்கப்பட்ட கேளிக்கை ராட்டினங்கள், விளையாட்டு எந்திரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அமைக்கப்பட்டிருந்த ராட்சத ராட்டினங்களை அகற்றும் பணியில் ஜார்ஜண்ட் மாநிலத்தை சேர்ந்த சோக்ரென் மாராண்டி(32) என்ற இளைஞர் ஈடுபட்டுள்ளார்.

ராட்சத ராட்டிணம் அகற்றும் பணியில் வடமாநில வாலிபர் உயிரிழப்பு

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மேலிருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவரை, மற்ற தொழிலாளர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர், அஞ்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் சோக்ரென் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கோட்டாறு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உயரமான ராட்சத ராட்டினத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில வாலிபர் கீழே தவறி விழுந்ததில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.Body:குமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் மகாராஜா அவிட்டம் திருநாள் நினைவு காப்பக மைதானம்(அனாதைமடம்) உள்ளது. இந்த மைதானத்தில், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் கேளிக்கை விளையாட்டுடன் கூடிய பொருட்காட்சி நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பொருட்காட்சியை, திட்டுவிளை பகுதியை சேர்ந்த பாரூக் என்பவர் நடத்தி வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த பொருட்காட்சி, நேற்று நிறைவு பெற்றது.

இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்ட ராட்சத கேளிக்கை ராட்டினங்கள், விளையாட்டு எந்திரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில், வட மாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டனர்.

அப்போது மைதானத்தில் அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினத்தை அகற்றும் பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோக்ரென் மாராண்டி, 32 என்ற வாலிபர் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக, திடீரென மேலிருந்து கீழே தவறி விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை, மற்ற ஊழியர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக, கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.