ETV Bharat / state

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நாகர்கோவில்: படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கன்னியாகுமரி
author img

By

Published : May 20, 2019, 1:52 PM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில், முக்கடல் சங்கமம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்றவற்றை படகில் சென்று பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருவது வழக்கம். மேலும், தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்நிலையில், இன்று காலை கடலின் நீர் மட்டம் குறைந்து காணப்பட்டதால் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. அதிகாலையிலேயே சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டு படகு சேவைக்கு பயணச்சீட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகு சேவை ரத்து செய்ததையடுத்து பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இது குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், கடல் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது படகு சேவை தொடங்கப்படும். அதுவரை படகு சேவை நிறுத்திவைக்கப்படும் எனக் கூறியது.

Intro:கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலில் நீர் மட்டம் குறைந்த காரணத்தினால் படகு சேவை இன்று காலை முதல் துவங்கப்படவில்லை இதனால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Body:கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலில் நீர் மட்டம் குறைந்த காரணத்தினால் படகு சேவை இன்று காலை முதல் துவங்கப்படவில்லை இதனால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் முக்கடல் சங்கமம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை அதற்கு கடலில் செல்ல படகு போக்குவரத்தை அனைத்து புகழ்பெற்றவையாகும் இங்கு இப்போது தற்போது கோடை விடுமுறை என்பதால் சீசன் களைகட்டி உள்ளது. இதனால் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .கன்னியாகுமரி கடற்கரை மற்றும் மைய பகுதிகளை திடீரென கடல் உள்வாங்கி நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய படகுகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்பட்டு வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா படகுகளில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காலை சூரிய உதயம் பார்த்துவிட்டு வரிசையில் இந்த சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து துவக்கப்படவில்லை என்றவுடன் கடும் அதிர்ச்சியில் திரும்பினர். இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் கேட்டபோது கனியாகும் இதில் தற்போது கடலில் மட்டும் குறைவாக காணப்படுகிறது நீர்மட்டம் சரியாகும் போது படகு விபத்து துவங்கப்படும் என கூறினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.