கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த ஸ்ரீநாத் சென்னை குற்றப்புலனாய்வு துறை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர துணை காவல் ஆணையராக பணியாற்றி வரும் பத்ரி நாராயண் குமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குமரி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜவகர் பதவி உயர்வு பெற்று சென்னை அண்ணாநகர் துணை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பத்ரிநாராயண் நாளை (ஜூலை12) பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்