கன்னியாகுமரி மாவட்டத்தில் வழுக்கம்பாறை - அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இந்த வழியாகத்தான் பொருள்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக ஜேம்ஸ்டவுன் என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் மீதமுள்ள ஐந்து அடி இடைவெளியில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கின்றன.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ