ETV Bharat / state

நாகர்கோவிலில் தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை! - நாகர்கோவில் இளைஞர் கொலை

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே தலையில் கல்லை போட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man murdered public place Kanniyakumari Murder Nagercoil Murder நாகர்கோவில் கொலை கன்னியாகுமரி கொலை
Nagercoil Youth Murder
author img

By

Published : Mar 9, 2020, 12:31 PM IST

Updated : Mar 9, 2020, 3:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமன்புதூர் சந்திப்பு பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது.

இதைக் கண்ட அப்பகுதியினர், நேசமணிநகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ஜவஹர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மோப்ப நாய் ஓரா வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்தவர் நாகர்கோவில் பைப்புவிளை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (40) என்பதும், மதுவிற்கு அடிமையான இவர், கூலி வேலைகளுக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

கால்வாயில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சடலம்.

மேலும் சதீஷ் உடன் இரவில் மது அருந்தியவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது: 7.55 லட்சம் ரூபாய் பறிமுதல்

Last Updated : Mar 9, 2020, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.