கன்னியாகுமரி: திமுக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான சுரேஷ் ராஜனுக்கு தணிக்கை குழு உறுப்பினர் பதவி திமுக தலைமையால் வழங்கப்பட்டது. பதவி பெற்ற பின்பு சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சுரேஷ் ராஜனுக்கு நாகர்கோயில் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் திமுகவினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்ததை தொடர்ந்து அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சிரித்தபடியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஏற்கனவே சாலைகள் சரியில்லை எனவும் போக்குவரத்து இடையூரால் பயணிக்க முடியவில்லை என்றும் ஆவேசம் அடைந்த அவர் சாலையினை சரி செய்த பின்பு திமுகவினர் நிகழ்ச்சியை நடத்தட்டும் என கூறினார்.
இதையும் படிங்க: வீடியோ: செல்போன் பேசிக் கொண்டு பைக்கில் செல்லும் காவலர்