ETV Bharat / state

'நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துக' - பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி: தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நாய்கள்
author img

By

Published : Aug 2, 2019, 2:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் மருத்துவமனைகள், வங்கிகள், வணிக வளாகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

இங்குள்ள பகுதிகளில் சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் ஒருசில நாய்களுக்கு தோல் நோய் போன்றும் உள்ளது.

தெருக்களில் நடமாடும் நாய்கள்

பெரும்பாலான நேரங்களில் இந்த நாய்கள் நடந்து செல்வோரையும் இருச்சக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச் சென்று கடித்தும்விடுகின்றன. சமீப காலமாக இந்த நாய்களிடம் கடி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக இந்த நாய்கள் பெருக்கத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தெரு நாய்கள் பெருக்கத்தை சம்பந்தப்பட்ட துறையினர் கட்டுப்படுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Body:tn_knk_01_dogs_nuisance_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தெரு நாய்கள் பெருக்கத்தை சம்பந்தப்பட்ட துறையினர் கட்டுப்படுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதிலும் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் மருத்துவமனைகள், வங்கிகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களிலும் நடந்தும் எப்போதும் செல்வர். இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள பகுதிகளில் சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவ்வாறு பெருகி வரும் நாய்கள் ரோட்டோரங்களிலும் நடுரோடுகளிலும் சுற்றித்திரிகின்றன. இவ்வாறு கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் இருச்சக்கர வாகனங்களில் செல்வோரையும் நடந்து செல்வோரையும் குரைத்துக்கொண்டே துரத்தி செல்வதால் இந்த பகுதிகளை கடப்போர் மிகுந்த எச்சரிக்கையுடனும் பயத்துடனும் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இங்குள்ள நாய்கள் ஒரு வித தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியை கடந்து செல்வோர் இந்த நோய் பாதிப்புள்ளவர்களை கண்டு அச்சப்படுகின்றனர். இந்த பகுதியைச்சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அச்சத்திலேயே உள்ளனர். பெரும்பாலான நேரங்களில் இந்த நாய்கள் நடந்து செல்வோரையும் இருச்சக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடித்தும் விடுகின்றன.சமுப காலமாக இந்த நாய்களிடம் கடி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவைகள் ரோட்டின் நடுவில் நின்று அடிக்கடி ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வதால் இருச்சக்கரவாகனத்தில் செல்வோர் பயந்து கீழே விழுந்தும் விடுகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த நாய்கள் பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.