ETV Bharat / state

நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கரோனா!

கன்னியாகுமரி: நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 27, 2020, 8:30 PM IST

Nagercoil DMK MLA Suresh Rajan tested Coronavirus Positive

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் நேற்று (ஜூலை 26) கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 27) அவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின் மூலம் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எம்எல்ஏ சுரேஷ்ராஜன் நிவாரண உதவிகள் வழங்கி வந்தார். மேலும் கரோனா பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவிகள் செய்தார். இதன் மூலம் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.