ETV Bharat / state

நாகர்கோவில்-திருச்சி இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் ரயில் சேவை நிறுத்தம்!

author img

By

Published : Aug 5, 2020, 3:31 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில்-திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரயிலை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட்
இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட்

இது தொடர்பாக, தென்னக ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது," நாகர்கோவில்-திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரயில் ஜூன் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரையும் பின்னர் ஜூலை 31 வரையும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாகர்கோவில்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவையை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையை நாகர்கோவில்-திருச்சி சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி ரயில் (வண்டி எண் 02628), திருச்சி-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி ரயில் (வண்டி எண் 02627) ஆகிய இரு மார்க்க ரயில்களும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்த பயணிகள் முழு தொகையும் திரும்பி வழங்கப்படும். ஆன்லைன் வழியாக டிக்கெட் எடுத்தவர்களுக்கு அதே இ-பேமெண்ட் வழியாக பணம் திரும்ப செலுத்தப்படும். பிஆர்எஸ் கவுண்டர் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஆறு மாதங்களுக்குத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.