கன்னியாகுமரி: நாகராஜா கோயிலில் தை திருவிழாவுக்கான கால்கோள் விழா, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
நாகர்கோவில் நாகராஜா கோயிலில், அனந்தகிருஷ்ணசாமி கோயில் தை பெரும் திருவிழா வரும் 2021இல் ஜனவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து தைப்பூசம் நட்சத்திரத்தன்று காலையில் தேரோட்டம், ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆறாட்டு ஆகியன நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டி, கோயிலில் கால்கோள் விழா நடைபெற்றது. இதில், கோயில் அலுவலர்களும் பக்தா்கள் சங்க நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனா். வழக்கமாக இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களின்றி கால்கோள் விழா நிகழ்ச்சி மிக எளிமையாக நடைபெற்றது.