மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஒரு பிரிவுதான்.
இதற்கு முந்தைய திட்டத்தில் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும், மக்கள் சம்மதித்தால் மட்டுமே அதை செயல்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் இந்த புதிய திட்டத்தின் கீழ் அந்த கருத்துக்கேட்பு சட்டத்தை தளர்த்தி உள்ளனர்.
இதனால் பல திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்காமலே அந்தத் திட்டங்களை நிறைவேற்றலாம் என்று திருத்தம் செய்துள்ளனர்.
இதன் மூலம் எந்த திட்டங்களுக்கு எல்லாம் தமிழ்நாட்டில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அந்தத் திட்டங்களை எல்லாம் மக்களின் கருத்து கேட்பு இல்லாமல் அதனை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.
எனவே இந்தத் திட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுக்கக்கூடிய திட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை எதற்கு?' - கார்த்தி சிதம்பரம் எம்பி