திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 29ஆம் தேதி கோடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நடைபயணமாக காவடிகளை சுமந்து திருச்செந்தூர் முருகன் கோயிலை நோக்கி யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காவடிகளை சுமந்தபடி சென்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள அழகிய விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சந்தனக் காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்து நடைபயணமாகச் சென்றனர்.
இதையும் படிங்க: பழனியில் தைப்பூச தேரோட்டம் : தேரின் வடம் இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!