கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே குருக்கள் மடத்தை சேர்ந்தவர் செந்தில் கார்திகேயன். இவர் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக( VAO) பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்றிரவு (ஜூலை30) அலுவலகத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, அவரது ஊரில் அவரது சொந்த தோப்பில் சிலர் அத்துமீறி திருட்டு தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் அந்த திருட்டு கும்பலை பிடிக்க தோப்பிற்குள் சென்ற போது, எதிர்பாராத விதமாக தேங்காய் திருடர்கள் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கிராம நிர்வாக அலுவலரை தாக்கி விட்டு தேங்காய் திருடர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: டிராக்டரை கடத்திச் சென்ற ஆயுதப்படை காவலர் மீது வழக்குப் பதிவு