சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அரசு சுகாதார நிலையம் உள்ளது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆனால், இங்கு உயிர் காக்கும் மருந்துகளைப் பாதுகாத்து வைப்பதற்கான குளிர்சாதனப் பெட்டி சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
சில வாரங்களுக்கு முன்பு, இந்த சுகாதார நிலையத்தை வசந்தகுமார் எம்.பி. ஆய்வு நடத்திய போது, மருத்துவர்கள் உயிர் காக்கும் மருந்துகளைப் பாதுகாத்து வைக்க குளிர்சாதனப் பெட்டி வசதி இல்லாததால், அவசர சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று கூறினர்.
தற்போது வசந்தகுமார் எம்.பி. தனது சொந்த செலவில், அரசு சுகாதார நிலையத்துக்கு குளிர்சாதனப் பெட்டியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஜெனட், உதயபானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குடிமராமத்துப் பணியை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர்