ETV Bharat / state

குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு! - காங்கிரஸ் உறுப்பினர்கள்

கன்னியாகுமரி: கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியால் பலவித பாதிப்புகள் உள்ளதாக கூறி குவாரியை உடனடியாக மூட வேண்டுமென 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

More than 500 petition to the Collector More than 500 petition to the Collector to close the quarry!to close the quarry!
More than 500 petition to the Collector to close the quarry!
author img

By

Published : Oct 6, 2020, 6:58 PM IST

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரியின் சுற்றுவட்டார பகுதிகளான தாரத்தட்டு, ஈத்தங்காடு , கப்பியறை, வாழ்வச்சகோஷ்டம், முருங்காவிளை, திப்பிறமலை, தாராதட்டு, பள்ளத்துவிளை, இடைமலை கோணம் ஆகிய பத்து ஊர்களை சுற்றிலும் ஏராளமான மலைகள் உள்ளன.

இந்த பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைகளில் கல் உடைக்கும் கிரஷர்கள் அமைக்கப்பட்டு அதிகமான கற்கள், பாறைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. பத்து அடிக்கும் மேல் குழி தோண்டி எலக்டிரிக்கல் வெடி வைத்து தினமும் குறையாமல் 1500 லோடு கற்கள் கேரளாவிற்கு கடத்தபடுகிறது.

குவாரியை மூடக்கோரி 500க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு

கல்குவாரி அமைந்துள்ள பகுதியின் அருகில் 500க்கும் மேற்பட்ட வீடுகளும், கிராமச் சாலைகள், குளங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த கல்குவாரியிலிருந்து வெளிவரும் கழிவு நீர் மற்றும் வெடிவைப்பதால் ஏற்படும் அதிர்வு, ஒலி ஆகியவை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தனியாருக்கு சொந்தமான குவாரி மற்றும் கிரசர்களை உடனடியாக தடைசெய்து, கல்குவாரியை மூட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதல் கைகூடாத சோகம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.