திருநெல்வேலி மாவட்டம் பணகுடி வனப்பகுதியில் 3 இளைஞர்கள் உடும்பு வேட்டையாடி அதனை குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில், வன ஊழியர்கள் கொண்ட தனிப்படையினர் வன பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே டிராக் பகுதியில் கையில் பையுடன் 3 பேர் பதுங்கியிருப்பதை கண்ட வனத்துறையினர், அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர்கள் உடும்பு வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணை நடைபெற்ற போது ரீகன்(35) என்பவர் தப்பி ஓடிவிட்டார். இசக்கிமுத்து(38), சகாய ஜோஸ் என்ற மைக்கேல் ராஜ்(32) ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த 8 கிலோ எடை கொண்ட உடும்பு மற்றும் தப்பியோடியவரின் இருசக்கர வாகனத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவரை பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
உடும்புகளை வேட்டையாடி விற்க முயன்ற இருவர் கைது - உடும்புகளை வேட்டையாடி விற்க முயன்றவர் கைது
கன்னியாகுமரி: திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி அருகே உள்ள வனச் சரகத்தில் உடும்புகளை வேட்டையாடி அதை நாகர்கோவிலில் விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
![உடும்புகளை வேட்டையாடி விற்க முயன்ற இருவர் கைது உடும்புகளை வேட்டையாடி விற்க முயன்ற கும்பல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:51-tn-knk-04-hunting-two-arrested-visual-7203868-09062020174352-0906f-1591704832-885.jpg?imwidth=3840)