பேச்சிப்பாறை அணையில் 63 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மூன்று தலைமுறைகளாக 47 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்களுக்கு மாற்று இடமும், வீடும் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவித்து, அதன்பின் பட்டாவும் வழங்கப்பட்டது.
அதற்கான இடத்தைத் தேர்வு செய்து வழங்கி வீடு கட்டிக் கொடுக்காமல் ஏற்கனவே சமத்துவபுரம் பகுதியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தில் இருக்கக் கூறினார். இந்நிலையில், அம்மக்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டித் தர வேண்டும் என்று கன்னியாகுமாரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.