ETV Bharat / state

Viral video - மக்களை இருட்டில் தவிக்க விட்டு சாக்கு போக்கு சொல்வதா? அலட்சிய அலுவலர்கள் லெப்ட் அண்ட் ரையிட் வாங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்! - கன்னியாகுமரி நிவாரண முகாமில்  அமைச்சர் தங்கராஜ் ஆய்வு

கன்னியாகுமரியில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்காத அலுவலர்களை அமைச்சர் தங்கராஜ் கோபம் கொண்டு எச்சரித்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்
author img

By

Published : Nov 14, 2021, 6:34 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கலிங்கராஜபுரம் முகாமில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அங்கு சென்றார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி

அதிரடி காட்டிய அமைச்சர்

அங்கு மக்களுக்கு உணவு, மின்சார வசதி, பெட்ஷீட், தலையணை என எந்த அடிப்படை வசதியும் வழங்காமல் இருட்டில் மக்கள் தவிப்பதை கண்டு அலுவலர்களிடம் கோபம் கொண்டார். அலுவலர்களிடம் விளக்கம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் ஒருவருக்கொருவர் தட்டிக் கழித்துள்ளனர்.

இதனால் மேலும் கோபமடைந்த அவர், பெண்கள் எல்லாரும் இருட்டில் இருக்கிறார்கள் ஒரு லைட் கூட ஏற்பாடு பண்ண முடியாதா? நா என்ன உங்க வீட்டு பணத்துலயா பன்ன சொல்றேன், அரசு நிதி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உடனே ஜெனரேட்டர் கொண்டு வந்து மின்சாரம் வழங்க வேண்டும், உணவு, பாய், தலையணை கொடுக்க வேண்டும் எனக் கூறி லெப்ட் அண்ட் ரயிட் வாங்கினார்.

மக்களுக்கு ஆறுதல்

இதையடுத்து அலுவலர்கள் உடனடியாக ஜெனரைட்டர் வரவழைத்து மின்சாரம் வழங்கினர். அமைச்சர் என்ற முறையில் அலுவலர்களுக்கு ஆர்டர் போட்டு அங்கிருந்து செல்லாமல், மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்ததை உறுதி செய்த பின் அங்கிருந்து கிளம்பினார்.

மேலும் மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்பு இருப்பதால் இரண்டு நாள்கள் இங்கு தங்கிக் கொள்ளுங்கள், மழை ஓய்ந்த பின் வீடுகளுக்கு செல்லுங்கள் எனக் கூறி மக்களுக்கு ஆறுதல் கூறினார். அலுவலர்களை அமைச்சர் கண்டித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்தச் செயல் பாராட்டுதலை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாற்றம்: மறு பரிசீலனை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.