கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சமூகத்தில் மூட்டை பூச்சியாக, சிலந்தியாக, கரப்பானாக செயல்பட்டு ஏற்ற தாழ்வு கொண்ட சமூகமாக உருவாக்கியவர்களுக்கு திமுக என்றும் பூச்சிக்கொல்லிதான். அதனை அழித்து ஒழித்து சமூகத்தில் சம தர்மம், சமூக நீதி எல்லாவற்றையும் கொண்டு வந்தது.
அப்படி வந்ததால் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்த தமிழிசை இன்று ஆளுநராக இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு அவர் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் மற்றும் சனாதன வாதிகளின் வெற்றி என்பது அவர்களால் சூத்திர பட்டம் சாட்டப்பட்ட மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அநீதி தான். தமிழிசை எங்கிருந்து பேசுகிறார் எதற்காக பேசுகிறார் என்பது தெரியவில்லை, பேசும் இடத்தில் அவர்களை வைத்த இந்த சமூக நீதி கோட்பாட்டு அரசியலை பற்றி பேசுகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
அவர் வேண்டுமென்றே பேசுகிறாரா அல்லது பேசுவதற்காக நிர்பந்திக்கப்படுகிராறா, பதவி மீது அதீத ஆசை காரணமாக பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. சிலர் பதவி மோகத்திற்காக எதை வேண்டுமாாலும் செய்ய துணிந்து விட்டார்கள். அதிகாரத்தின் கைக்கூலியாக அமர்ந்து விட்டு எதை எதையோ பேசி குழப்பத்தை ஏற்படுத்த கூடாது குறிப்பாக ஆளுநர்கள் இதனை செய்ய கூடாது” என்றார்.
இதையும் படிங்க: 'வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடுபவர்களுக்கு, தமிழச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை'