ETV Bharat / state

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கடம்பூர் ராஜூ புகழ் அஞ்சலி! - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் கிரீஸ்கர்மா விருதினை பெற்று தந்தவர் மறைந்த அமைச்சர் துரைகண்ணு என கூறி தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துரைக்கண்ணுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்.

minister kadambur raju pay homage to agri minister durai kannu
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடம்பூர் ராஜூ புகழ் அஞ்சலி
author img

By

Published : Nov 1, 2020, 4:25 PM IST

கன்னியாகுமரி: உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உருவப்படம் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகையில் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் துரைக்கண்ணுவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, " மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்தவர். அவர் கட்சியிலும், அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர்.

துரைக்கண்ணுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழ் அஞ்சலி

கடந்த 2006, 2011, 2016 ஆகிய மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். தற்போது வேளாண்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர். அவர் பணியாற்றிய காலத்தில் மத்திய அரசின் க்ரீஸ்கர்மா விருதினை 5 முறை பெற்று தந்து தமிழ்நாடு வேளாண்துறைக்கு பெருமை சேர்த்தவர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்துவந்த பாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.