ETV Bharat / state

நாகர்கோவிலில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் இணைந்தார்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் சமூக வலைதளங்கள் வாயிலாக குடும்பத்துடன் இணைந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் இணைந்தார்

author img

By

Published : Mar 12, 2021, 2:28 PM IST

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தம் (45). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சுற்றித் திரிந்தார்.

கரோனா ஊரடங்கின்போது தன்னார்வலர் தினேஷ் என்பவர் சாலைகளில் சுற்றித் திரியும் நபர்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கி உதவி செய்தார். அப்போது இவருடன் ஆனந்தமும் உடனிருந்தார். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மனநலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் இணைந்தார்

இதனைப் பார்த்த ஆனந்தம் உறவினர்கள் உடனடியாக தினேஷை தொடர்புக் கொண்டு, நாகர்கோவில் வந்தனர். இதனையடுத்து அவரை குளிக்க வைத்து, புது ஆடைகள் வாங்கிக் கொடுத்து சொந்த ஊருக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரியில் ஒரு பெண்ணை ஆனந்தம் காதலித்தார். இவர் வசதி இல்லாத காரணத்தால் வேறு ஒருவருக்கு பெற்றோர் அப்பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இது தொடர்பாக ஆனந்தம் கேட்டதற்கு, அவரது தலையில் பெண் வீட்டார் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆனந்தம் அவரது உறவினர்களுடன் சேருவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவலர்களும் பெரும் உதவி செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஐஐடி, மருத்துவப் படிப்புகளுக்குக் கோட்டாதான் பெஸ்ட்- ஜேஇஇ டாப்பர் நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.