நெல்லை மாவட்டத்தை அடுத்த தெற்கு கள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராணி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீராக கோளாறு சம்பந்தமாக சிகிச்சை பெற வெட்டூர்ணிமடத்தில் உள்ள பென்ஷாம் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் முதலமைச்சரின் விரவான மருத்துவ காப்பீடு திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி பணம் பறிப்பதாகவும், தரமற்ற உபகரணங்கள் மூலம் டயாலிஸிஸ் சிகிச்சை அளிப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து அரசு மருத்துவத் துறை அலுவலர்களுக்கு புகார் அளித்து உள்ளார்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் தனது சிகிச்சை குறிப்பேட்டை தரமறுத்ததால் நியாயம் கேட்டு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகையிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோய் இல்லாதவர்களுக்குக்கூட அறுவை சிகிச்சைவரை கொண்டு சென்று பணம் பறிப்பதாக சமீபகாலமாக சாதாரண நோயாளிகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அந்தவகையில் பென்ஷாம் மருத்துவமனையிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடதக்கது.