கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் திருமண நிகழ்வுகளிலும் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கணேஷ்வரி - அருண்குமார் ஆகியோருக்கு கழுவன்திட்டை சத்யா ஆடிட்டோரியத்தில் வைத்து நேற்று பிரமாண்டமாக திருமணம் நடத்த திட்டம் தீட்டியிருந்தனர்.
இதற்காக இரு வீட்டாரும் சுமார் மூன்றாயிரம் அழைப்பிதழ்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலருக்கும் கொடுத்திருந்தனர். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் மணமகன் வீட்டார் பத்து பேர், மணமகள் வீட்டார் பத்து பேர் என சமூக இடைவெளியுடன் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று ஆலம்பாறை கிருஷ்ணன் கோயிலில் வைத்து கோயில் அர்ச்சகர் வேதமந்திரங்கள் முழங்க திருமணம் எளிமையாக நடைபெற்றது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு