கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. "பெண்களின் சபரிமலை" என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படும் இந்தக் கோயிலின் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோயிலின் கருவறையில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோயிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதன்பின் கொடியேற்றப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.
இந்த நிகழ்வில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உட்பட தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவின் முக்கிய நாளான பத்தாம் நாள் விழாவன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அன்றைய தினம் ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.