கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா நடைபெற்றுவருகிறது. மார்ச் 1ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கிய இத்திருவிழாவில் இன்று பத்தாவது நாள். இந்தப் பத்தாவது நாள் விழாவின் இறுதிநாள் என்பதால் தமிழ்நாடு, கேரளாவிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் வருகைதருவார்கள்.
அதற்காகச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதனிடையே இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு ஒடுக்குப் பூஜையுடன் பத்து நாள்கள் மாசி திருவிழா நிறைவுபெறும்.
இதையும் படிங்க: கொரோனா பீதி: காஷ்மீரின் லே மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை