கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கிறிஸ்து நகர் ஜோதி தெருவைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி ஜெகதீஸ் (38). இவருக்குத் திருமணம் ஆகாத நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டின் உள் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியினர் சந்தேகம் அடைந்து வடசேரி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி காவல் துறையினர் ஜெகதீஸின், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஜெகதீஸ் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நிலையில், உடல் அழுகியநிலையில் துர்நாற்றத்துடன் பிணமாகக் காணப்பட்டார்.
அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: