ETV Bharat / state

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை!

கன்னியாகுமரி: பேச்சிப்பாறையில் 17 வயது மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Apr 22, 2021, 11:53 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை சேர்ந்தவர் கேசவன். இவர் அரசு ரப்பர் கழகத்தில் தற்காலிக பால்வெட்டும் தொழிலாளியாக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு காலத்தில் வீட்டில் இருந்தபோது, கடந்த 2016ஆம் ஆண்டு அவரது வீட்டு அருகே உள்ள கூலித் தொழிலாளியின் மகளான 17 வயது மனநலம் குன்றிய சிறுமியை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் விசாரணை செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எழில் வேலன் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர், குற்றம் சாட்டப்பட்ட கேசவனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.