ETV Bharat / state

குடும்ப பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது! - பாலியல் தொழில் தரகர்

கன்னியாகுமரி: 50க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வள்ளியூரைச் சேர்ந்த தரகர் மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Man arrested for prostituting family women

author img

By

Published : Oct 21, 2020, 6:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் லாயம் விலக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு இளம் பெண்கள், ஒரு இளைஞரை பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில், பிடிபட்ட இளைஞன் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த மகேஷ் (35) என்றும், இவர் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்துவந்த நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பாலியல் தொழில் புரோக்கராக மாறியவர் என்றும் தெரியவந்தது.

இவர், 50-க்கும் மேற்பட்ட வறுமையில் வாடும் குடும்பப் பெண்களை ஆசைவார்த்தை காட்டி குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வீடுகள் எடுத்து தொடர்ந்து பாலியல் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆரல்வாய்மொழி காவலர்களால் மகேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் பிடிபட்ட இரண்டு இளம் பெண்களும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய குமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த பாலியல் பெண் தரகர் பிரேமாவை (45) காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பாலியல் தொழில் தரகருடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.