மகாளய அமாவாசையில் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, இன்று மாகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித் துறை கடற்கரையில் பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலை நான்கு மணிக்கே குவியத்தொடங்கினர்.
பின்னர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு முக்கடலில் நீராடினர். மேலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசியில் வந்த மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கே திறக்கப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: