ETV Bharat / state

திமுகவில் உறுப்பினரானார் மு.க. அழகிரி! - dmk online membership

நாகர்கோவில்: திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அட்டை ஆன்லைனில் வழங்கப்பட்டது.

அழகிரி
அழகிரி
author img

By

Published : Sep 24, 2020, 9:15 AM IST

திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது மத்திய உரத்துறை அமைச்சராக அவரது மூத்த மகன் மு.க. அழகிரி பதவி வகித்தார். பின்நாட்களில் கட்சியில் யாரையும் மதிப்பதில்லை, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார் என்ற காரணங்களுக்காக இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

எனினும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியில் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி அழகிரி நேரடியாகவும் மறைமுகமாகவும் தூதுவிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்கபடவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஆன்லைன் வழியாக திமுகவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

M. K. Alagiri got dmk online membership card
உறுப்பினர் அட்டை

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் முன்னாள் திமுக பேரூர் செயலாளராக இருந்தவர் கபிலன். அழகிரியின் தீவிர விசுவாசியான இவர், திமுக ஆன்லைன் சேர்க்கையில் அழகிரி பெயரில் உறுப்பினர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவர் ஆன்லைன் மூலமாக அழகிரி பெயருக்கு திமுக உறுப்பினர் அட்டை கேட்டதும் அழகிரியின் புகைப்படத்துடன் கூடிய திமுக உறுப்பினர் அட்டை கிடைத்துள்ளது. இதை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கபிலன் கூறுகையில், "பாஜகவில் முன்பு மிஸ்டுகால் மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அதேபோன்றுதான் தற்போது திமுகவில் நடைபெற்று வருகிறது. அழகிரியின் பெயரை குறிப்பிட்டு அவரது தந்தை பெயர், வீட்டு முகவரி என மிக தெளிவாக குறிப்பிட்டுதான் விண்ணப்பித்தேன். இதையடுத்து மிக எளிதாக அழகிரியின் பெயருக்கு உறுப்பினர் அட்டை கிடைத்துவிட்டது."

கபிலன்

இதனால் அழகிரி தற்போது அதிகாரப்பூர்வமாக திமுக உறுப்பினர் ஆகிவிட்டார். இனி யாரும் அவரை திமுகவில் இல்லை என்று கூறமுடியாது. எனவே அழகிரியை முறையாக கட்சியில் சேர்த்து அங்கீகரிக்க வேண்டும். அவர் மூலம் திமுக அனைத்து தரப்பு மக்களிடமும் மீண்டும் சென்றடைய முடியும்" என்றார்.

இதையும் படிங்க:
இணைய வழியில் மக்களை ஏமாற்றும் திமுக - ஜெயக்குமார் குற்றச்சாட்
டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.