ETV Bharat / state

மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையிலுள்ள 2,984 வழக்குகள் விசாரணைக்கு வருகிறது!

கன்னியாகுமரி: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 14ஆம் தேதி நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையிலுள்ள 2,984 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

Lok adalat on 14th december  மக்கள் நீதிமன்றம்  2984 வழக்குகள் விசாரணைக்கு வருகிறது  குமரி மாவட்டத்தில் நீதிபதிகள் கூட்டம்
நீதிபதிகள் கூட்டம்
author img

By

Published : Dec 9, 2019, 12:09 PM IST

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வைத்து மாவட்ட நீதிபதி அருண்முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

அதன்படி அன்றைய தினம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இதில் உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, குற்றவியல், காசோலை உள்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 2,984 வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

மாவட்டத்தில் நீதிபதிகள் கூட்டம்

வழக்கு விசாரணையின்போது சமரசமாகச் செல்பவர்களுக்கு உடனடி இழப்பீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதேபோன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,214 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,153 வழக்குகள் சமரசமாக முடிந்தன. இந்த வழக்குகளின் மூலம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 39 ஆயிரத்து 745 பெறப்பட்டது” என அவர் கூறினார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதில் நிலுவையிலுள்ள 2984  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

Body:குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வைத்து மாவட்ட நீதிபதி அருண்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. அதன்படி அன்றைய தினம் குமரிமாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இதில் உரிமையியல், மோட்டார் வாகனம் விபத்து, குற்றவியல், காசோலை உள்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வு காணப்படும்.
குமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 2984 வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. வழக்கு விசாரணையின்போது சமரசமாக செல்பவர்களுக்கு உடனடி இழப்பீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3214 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1153 வழக்குகள் சமரசமாக முடிந்தன. இந்த வழக்குகளின் மூலம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 39 ஆயிரத்து 745  பெறப்பட்டது.
 இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.