ETV Bharat / state

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 பாட்டில் மது பறிமுதல்! - வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 பாட்டில் மது பறிமுதல்

கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 பாட்டில் மதுவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

liqour bottle seized
author img

By

Published : Nov 13, 2019, 5:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கடி போலி மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகாலையிலேயே மது குடிக்கும் குடிமகன்களை குறிவைத்து இந்தப் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல அதிகாலையில் குடிக்கும் குடிமகன்களை குறிவைத்து டாஸ்மாக்கில் இருந்து மதுபானங்களை அதிகளவு வாங்கி பதுக்கி வைத்து பின்னர் அரசு அனுமதியின்றி அதிக விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்யும் தொழில் குமரி மாவட்டத்தில் களைகட்டுகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 மது பாட்டில்கள்

இந்நிலையில் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நூறு பாட்டில் மதுவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக செல்வக்குமாரின் மனைவி சுஜாதா(36) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகிய செல்வகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கன்னியாகுமரியில் கரை ஒதுங்கிய இளைஞர் உடல்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 பாட்டில் மது பறிமுதல். இதில், தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கடி போலி மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகாலையிலேயே மது குடிக்கும் குடிமகன்களை குறிவைத்து இந்தப் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இதேபோல அதிகாலையில் குடிக்கும் குடிமகன்களை குறிவைத்து டாஸ்மாக்கில் இருந்து மதுபானங்களை அதிகளவு வாங்கி பதுக்கி வைத்து பின்னர் அரசு அனுமதியின்றி அதிக விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்யும் தொழில் குமரி மாவட்டத்தில் களைகட்டுகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 இந்நிலையில் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரது வீட்டில் அரசு அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த நூறு பாட்டில் மதுவை  போலீசார்  பறிமுதல் செய்தனர்.

 இதுதொடர்பாக செல்வக்குமாரின் மனைவி சுஜாதா 36 என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான செல்வகுமாரை தேடி வருகின்றனர். இது போல குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அனுமதியின்றி மது விற்கும் நபர்களை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.