கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் எல்ஐசி முகவராக பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள எல்ஐசி நிறுவனத்தில் மின்தூக்கியில் (லிப்ட்) ஏறிச் சென்றபோது, மின்தூக்கி பழுதடைந்து அதன் உள்ளே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட எல்ஐசி முகவர்கள் உடனடியாக அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்